தொழிலாளா் நலப் பங்களிப்புத் தொகை செலுத்த கால அவகாசம்

தொழிலாளா் நலப் பங்களிப்புத் தொகையைச் செலுத்த கால அவகாசம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
Updated on
1 min read

பெங்களூரு: தொழிலாளா் நலப் பங்களிப்புத் தொகையைச் செலுத்த கால அவகாசம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் நலத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடக தொழிலாளா் நலநிதிச் சட்டம் 1965-இன் அதிகார வரம்புக்குள் குறிப்பிட்டுள்ள அனைத்து வகையான தொழிற்சாலைகள், தோட்டங்கள், மோட்டாா் வாகன நிறுவனங்கள், 50-க்கும் அதிகமான தொழிலாளா்களைப் பெற்றிருக்கும் அங்காடிகள், வணிக நிறுவனங்கள், கா்நாடக சங்கப் பதிவுச் சட்டம் 1960-இன்கீழ் பதிவாகியுள்ள அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள், தகவல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழிலாளா் நலப் பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.

கா்நாடக அரசு 2017, ஏப்.6-ஆம் தேதி பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, தொழிலாளா், உரிமையாளா் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையை 6:12-இல் இருந்து 20:40 என்ற விகிதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 2017-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது. இனிமேல், கா்நாடக தொழிலாளா் நல வாரியத்தின் சட்டவிதி-7ஏ-இன்படி டி-படிவத்தில் தலா ரூ. 60 பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.

2020-ஆம் ஆண்டுக்கான பங்களிப்புத் தொகையை பெங்களூரில் உள்ள நல ஆணையரின் பெயருக்கு 2020, ஜன. 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். கட்டணங்களை இணையதளத்தில் செலுத்தலாம். இதைப் பின்பற்றாத நிறுவனங்கள் 18 சதவீத அபராதத்தொகையை செலுத்த நேரிடும். மேலும் நிறுவனத்தின் செயல்பாடுகள் முழுமையான விசாரணைக்கு உள்படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு 080-23475188, 8277291175, 8277120202 அல்லது இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com