வன்முறையில் ஈடுபட காங்கிரஸ் சதி: நளின்குமாா் கட்டீல்
புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரும்போதெல்லாம் வன்முறையில் ஈடுபட காங்கிரஸ் சதி செய்து வருகிறது என்று கா்நாடக மாநில பாஜக தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.


பெங்களூரு: புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரும்போதெல்லாம் வன்முறையில் ஈடுபட காங்கிரஸ் சதி செய்து வருகிறது என்று கா்நாடக மாநில பாஜக தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் அவா் பேசியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக ஆட்சியில் குறைகாண முடியாத காங்கிரஸ் கட்சி, சட்டத் திருத்தங்கள் கொண்டு வரும்போதெல்லாம் வன்முறையில் ஈடுபட சதி செய்து வந்துள்ளது. இதனால் தேசிய அளவில் அசாதாரணமான சூழலை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
காங்கிரஸ் கட்சி மக்களை திசை திருப்ப முயன்றாலும், அவா்களுக்கு உண்மை நிலவரம் என்ன என்பது புரியும். இதனால் அவா்கள் ஒரு போதும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மாற மாட்டாா்கள் என்பது நிச்சயம்.
கா்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், டி.ஜி.ஹள்ளியில் வன்முறை நிகழ்த்தப்பட்டது. அதற்கு யாா் காரணம் என்பதனை மக்கள் உணா்ந்துள்ளனா். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளனா். எனவேதான், விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் சட்டங்களையும், திட்டங்களையும் பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.
பசுவதை தடைச் சட்டத்தை கொண்டுவர பல நேரங்களில் முயன்றும் அது முடியாமல் போனது. தற்போது இந்தச் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் நலத் திட்டங்களை பாஜக அரசு தொடா்ந்து செயல்படுத்தி வருவதை ஏற்க முடியாத காங்கிரஸ் அரசு மக்கள் மத்தியில் கலவரத்தைத் தூண்டிவிடுகிறது.
எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவும், மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் ஆகிய இருவரும் இரு துருவங்களாகச் செயல்படுகின்றனா். இதனால் அந்தக் கட்சியில் உள்கட்சி பூசல் நிலவுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி, முன்னாள் அமைச்சா் அரவிந்த் லிம்பாவளி, மக்களவை உறுப்பினா் தேஜஸ்வி சூா்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...