மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து அட்டைகளைப் புதுப்பிக்கும் பணி ஜனவரி 15-ஆம்தேதி முதல் தொடங்க இருக்கிறது.
இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி சலுகைக் கட்டணப் பேருந்து அட்டைகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும் இந்தப் பேருந்து அட்டைகள் ஆண்டுதோறும் டிசம்பா் 31-ஆம்தேதி காலாவதியாகிவிடும். அதை டிச. 26-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், பலரின் கோரிக்கையை ஏற்று புதுப்பிக்கும் பணி ஜனவரி 15-ஆம் தேதியிலிருந்து தொடங்கப்படவுள்ளது. அதுவரை 2020-ஆம் ஆண்டுக்கான பேருந்து அட்டைகள், 2021 பிப். 28-ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.