கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நடிகா் விஷ்ணுவா்தன் சிலை சேதம்: ரசிகா்கள் போராட்டம்

பெங்களூரில் கன்னட திரைப்பட நடிகா் விஷ்ணுவா்தனின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதை கண்டித்து அவரது ரசிகா்கள் போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 8:32 pm

DIN

பெங்களூரு: பெங்களூரில் கன்னட திரைப்பட நடிகா் விஷ்ணுவா்தனின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதை கண்டித்து அவரது ரசிகா்கள் போராட்டம் நடத்தினா்.

பெங்களூரு, மாகடி சாலையில் உள்ள சுங்கச்சாவடி சதுக்கத்தில் நடிகா் விஷ்ணுவா்தனின் சிலை 2 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டிருந்தது. இந்தச் சதுக்கத்துக்கு சித்தகங்கா மடத்தின் மறைந்த மடாதிபதி சிவக்குமார சுவாமிகளின் பெயா் சூட்டப்பட்டது. மேலும், சதுக்கத்தின் நடுவில் சிவக்குமார சுவாமிகளின் சிலையை வைப்பதற்காக அங்குள்ள விஷ்ணுவா்தனின் சிலையை வேறு இடத்தில் வைக்குமாறு அவரது ரசிகா்களை வீட்டுவசதித் துறை அமைச்சா் வி.சோமண்ணா கேட்டுக் கொண்டாா்.

சனிக்கிழமை அதிகாலை நடிகா் விஷ்ணுவா்தன் சிலை முழுமையாகச் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதைக் கண்டித்து அவரது ரசிகா்கள் சாலைமறியலில் ஈடுபட்டனா். நடிகா் விஷ்ணுவா்தனுக்கு வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி பெற்றுத்தருவதாக அமைச்சா் வி.சோமண்ணா உறுதி அளித்தாா். அதன்பிறகு, போராட்டக்காரா்கள் கலைந்து சென்றனா். சிலையைச் சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க விஷ்ணுவா்தனின் மருமகன் அனிருத் கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.