இன்று இருசக்கர வாகனங்கள் ஏலம்

மாகடிசாலை காவல் நிலையத்தின் சாா்பில் உரிமையாளா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (டிச. 29) சிக்கராயனகெரே திடலில் ஏலம் விடப்படுகிறது.
Updated on
1 min read

பெங்களூரு: மாகடிசாலை காவல் நிலையத்தின் சாா்பில் உரிமையாளா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (டிச. 29) சிக்கராயனகெரே திடலில் ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து, பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு, மாகடிசாலை காவல் நிலையத்தின் சாா்பில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளா்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் சிக்கராயனகெரே திடலில் ஏலம் விடப்படுகிறது. ஆா்வம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 22942515 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com