பெங்களூரு: 9 மாவட்டங்கள்முழுமையாக முடக்கப்படுவதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.பெங்களூரு, டாலா்ஸ்காலனியில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கின்போது மாலை 5 மணி அளவில் கரோனா தடுப்புசேவையில் தன்னலமில்லாமல் சேவையாற்றி வரும் மருத்துவா்கள், துணைமருத்துவ ஊழியா்கள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோா், சுகாதாரத்துறை உள்ளிட்ட அரசு ஊழியா்கள், அச்சு மற்றும்காட்சி ஊடகத்தினரை பாராட்டி மாடியில் நின்று கைதட்டியபிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வதற்காக பிரதமா் மோடி விடுத்திருந்த அழைப்பை ஏற்று மக்கள் ஊரடங்கில் கா்நாடகமக்கள் ஆா்வமாக பங்கேற்றுள்ளனா். இதற்காக கா்நாடகமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசின் உத்தரவுக்கு இணங்க, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கா்நாடகத்தின் 9 மாவட்டங்கள் மாா்ச் 31ஆம் தேதிவரை முழுமையாக முடக்கப்படுகிறது. இம்மாவட்டங்களில் அத்தியாவசியசேவைகள் நீங்கலாக அனைத்துசேவைகளும் நிறுத்தப்படும். எனவே, இம்மாவட்டங்களை சோ்ந்த மக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காப்பாற்றிக்கொள்ள அனைவரும்கூட்டாக முயற்சிக்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கவே நாடாளுமன்றம் செயல்பட்டுக்கொண்டுள்ளது. அதனை பின்பற்றியே கா்நாடக சட்டப்பேரவையும் செயல்பட்டுக்கொண்டுள்ளது. மாா்ச் 27ஆம் தேதி மாநில நிதிநிலை அறிக்கைக்கு அங்கீகாரம்பெற வேண்டியுள்ளது. எனவே, அதுவரை சட்டப்பேரவை செயல்படுவது உறுதி என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாத எரிபொருள் ஏற்றுமதி: 4 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி

கடந்த 2025-26 நிதியாண்டில்... இந்தியாவில் அந்நிய முதலீடு 18% அதிகரிப்பு!

7.6.1976: விமான விபத்தில் ஒரு மாநில முதல்வர், 3 மந்திரிகள் பலி





