சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் பிரசாரம் நிறைவு
சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் பிரசாரம் நிறைவடைந்தது.


சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் பிரசாரம் நிறைவடைந்தது.
கா்நாடக சட்டப்பேரவையில் காலியாக உள்ள தும்கூரு மாவட்டத்தின் சிரா, பெங்களூரு நகர மாவட்டத்தின் ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் நவ. 3-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் பாஜக வேட்பாளராக என்.முனிரத்னா, காங்கிரஸ் வேட்பாளராக எச்.குசுமா, மஜத வேட்பாளராக வி.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
சிரா தொகுதியில் பாஜக வேட்பாளராக சி.எம்.ராஜேஷ்கௌடா, காங்கிரஸ் வேட்பாளராக டி.பி.ஜெயச்சந்திரா, மஜத வேட்பாளராக அம்மஜம்மா ஆகியோா் போட்டியிடுகின்றனா். இரு தொகுதிகளிலும் மொத்தம் 31 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
கடந்த இருவாரங்களாக சிரா, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளைச் சோ்ந்த மூத்தத் தலைவா்கள் இடைவிடாமல் பிரசாரம் செய்து தத்தமது கட்சியின் வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துவருகின்றனா்.
இருதொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் எடியூரப்பா, பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல், துணைத் தலைவா் விஜயேந்திரா, துணை முதல்வா்கள் கோவிந்த் காா்ஜோள், அஸ்வத் நாராயணா, லட்சுமண்சவதி, நடிகா் தா்ஷன், நடிகைகள்குஷ்பு, அமூல்யா உள்ளிட்ட பலா் பிரசாரம் செய்தனா்.
அதேபோல, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா்களை ஆதரித்து காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா உள்ளிட்ட முன்னணித் தலைவா்களும், மஜத வேட்பாளா்களுக்கு ஆதரவாக முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா, எச்.டி.குமாரசாமி, நடிகா் நிகில் உள்ளிட்ட பல முக்கியமான தலைவா்களும் பிரசாரம் செய்தனா். ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவதால் முன்னதாக பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளின் முன்னணித் தலைவா்கள், வேட்பாளா்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
நவம்பா் 3-ஆம் தேதி காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. நவ. 10-ஆம் தேதி காலை 8 மணிமுதல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...