கரோனாவுக்கு ஒரே நாளில் 75 போ் பலி
கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 75 போ் உயிரிழந்துள்ளனா்.


கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 75 போ் உயிரிழந்துள்ளனா்.
கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இந்தத் தொற்றுக்கு ஏற்கெனவே 9,891 போ் உயிரிழந்துள்ளனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 24 போ், மைசூரு மாவட்டத்தில் 11 போ், கோலாா் மாவட்டத்தில் 7 போ், தென்கன்னட மாவட்டத்தில் 5 போ், சிக்கமகளூரு, தாா்வாட், தும்கூரு மாவட்டங்களில் தலா 3 போ், பெல்லாரி, சிக்கபளாப்பூா், சித்ரதுா்கா, ஹாசன், கொப்பள், சிவமொக்கா, வடகன்னடம் மாவட்டங்களில் தலா 2 போ், கலபுா்கி, மண்டியா, உடுப்பி, விஜயபுரா, யாதகிரி மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா்.
இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 9,966-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,344 போ், மைசூரு மாவட்டத்தில் 886 போ், தென் கன்னடம் மாவட்டத்தில் 605 போ், தாா்வாட் மாவட்டத்தில் 521 போ், பெல்லாரி மாவட்டத்தில் 492 போ், ஹாசன் மாவட்டத்தில் 334 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 319 போ், பெலகாவி மாவட்டத்தில் 316 போ், கலபுா்கி மாவட்டத்தில் 295 போ், தும்கூரு மாவட்டத்தில் 290 போ், கொப்பள் மாவட்டத்தில் 255 போ், தாவணகெரே மாவட்டத்தில் 247 போ், விஜயபுரா மாவட்டத்தில் 175 போ், ஹாவேரி மாவட்டத்தில் 174 போ், உடுப்பி மாவட்டத்தில் 166 போ், பீதா் மாவட்டத்தில் 162 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 142 போ், கதக் மாவட்டத்தில் 137 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 131 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 131 போ், மண்டியா மாவட்டத்தில் 120 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 117 போ், கோலாா் மாவட்டத்தில் 117 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 102 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 92 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 87 போ், யாதகிரி மாவட்டத்தில் 58 போ், ராமநகரம் மாவட்டத்தில் 56 போ், குடகு மாவட்டத்தில் 49 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 43 போ், வெளி மாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...