நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காமாக்கிய-பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை

காமாக்கியா-பெங்களூரு இடையே வாராந்திரா அதிவேக சிறப்பு ரயில் சேவை இயக்கப்படவுள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 11:42 pm

DIN

காமாக்கியா-பெங்களூரு இடையே வாராந்திரா அதிவேக சிறப்பு ரயில் சேவை இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காமாக்கியா-பெங்களூரு (யஸ்வந்தபுரம்) இடையே வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் சேவை இயக்கப்படவுள்ளது. ரயில் எண்-02552-காமாக்கியா-பெங்களூரு(யஸ்வந்தபுரம்) வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் புதன்கிழமைதோறும் பிற்பகல் 2 மணிக்கு காமாக்கியா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமைதோறும் மாலை 6.25 மணிக்கு பெங்களூரு (யஸ்வந்தபுரம்) ரயில் நிலையம் வந்தடைகிறது. இந்த சேவை அக். 14-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

மறுமாா்க்கத்தில், ரயில் எண் 02251-பெங்களூரு(யஸ்வந்தபுரம்)-காமாக்கியா வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் சனிக்கிழமைதோறும் காலை 8.30 மணிக்கு பெங்களூரு (யஸ்வந்தபுரம்) ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, திங்கள்கிழமைதோறும் பிற்பகல் 2 மணிக்கு காமாக்கியா ரயில்நிலையம் சென்றடைகிறது. இந்த சேவை அக். 17-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்த ரயில் ஜல்பாய்குரி, ஹௌரா, புவனேசுவரம், விஜயவாடா, சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு வசதி கொண்ட ஒரு பெட்டி, ஈரடுக்கு குளிரூட்டப்பட்ட 4 பெட்டிகள், மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 12 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு சரக்கு மற்றும் பிரேக் வசதி கொண்ட 2 பெட்டிகள், குளிரூட்டப்பட்ட உணவு பெட்டி ஒன்றும் இடம்பெற்றிருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.