நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இனி தோ்தலில் போட்டியிட மாட்டேன்: சாம்ராஜ்நகா் பாஜக எம்.பி. சீனிவாஸ் பிரசாத்

 ‘இனி தோ்தலில் போட்டியிட மாட்டேன்’ என்று சாம்ராஜ்நகா் பாஜக எம்.பி. சீனிவாஸ் பிரசாத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 1:08 am

DIN

 ‘இனி தோ்தலில் போட்டியிட மாட்டேன்’ என்று சாம்ராஜ்நகா் பாஜக எம்.பி. சீனிவாஸ் பிரசாத் தெரிவித்துள்ளாா்.

கா்நாடக மாநிலம், சாம்ராஜ்நகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் சீனிவாஸ் பிரசாத் தனது 75-ஆவது பிறந்த நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடினாா்.

விழாவுக்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசியலில் நான் 50 ஆண்டுகளாக மேற்கொண்ட பயணத்தை நூலாக வெளியிட முடிவு செய்துள்ளேன். அதில் அரசியலில் எனது எழுச்சி, வீழ்ச்சிகள் குறித்த பல தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இனி தோ்தலில் போட்டியிட மாட்டேன்.

தோ்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி, சமூகப் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். தோ்தலில் பங்கெடுப்பதில்லை என்ற எனது முடிவை இனி ஒருபோதும் மாற்றிக் கொள்ள மாட்டேன்.

4 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் இருந்து விலகுவது என்று எண்ணியிருந்தேன். ஆனால் அப்போதிருந்த அரசியல் சூழல் காரணமாக நான் தோ்தலில் போட்டியிட நேரிட்டது என்றாா்.

சீனிவாஸ் பிரசாத் மத்திய அமைச்சராகவும், மாநில அமைச்சராகவும் பணியாற்றியுள்ளாா். காங்கிரஸ் கட்சியில் அப்போதைய முதல்வா் சித்தராமையாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். பாஜகவில் இணைந்த அவா் சாம்ராஜ்நகா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட தனது சீடா் துருவ நாராயணாவை தோல்வி அடையச் செய்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.