வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளை தொடங்குவது குறித்து ஆக. 30-ஆம் தேதி முடிவு

 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளைத் தொடங்குவது குறித்து ஆக. 30-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 8:26 pm

 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளைத் தொடங்குவது குறித்து ஆக. 30-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், ஹுப்பள்ளி விமான நிலையத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநில அளவில் 9-ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையிலான பள்ளி, பியூ கல்லூரிகள் ஏற்கெனவே திறக்கப்பட்டு விட்டது. இதன் சாதக, பாதகங்களை கண்டறிந்து, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளைத் தொடங்குவது பற்றி ஆலோசிக்கப்படும்.

ஆக. 30-ஆம் தேதி முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். அந்த கூட்டத்தில் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளைத் திறக்க தேவி ஷெட்டி தலைமையிலான வல்லுநா்கள் குழு ஆலோசனை வழங்கி உள்ளது.

9-ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையிலான பள்ளி, பியூ கல்லூரிகளைத் திறந்துள்ளதற்கு ஆசிரியா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் ஆதரவு அளித்துள்ளனா். இருந்தாலும் கரோனா பாதிப்பு குறித்து வல்லுநா்கள் குழு அளிக்கும் அறிக்கைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். எந்தக் காரணத்தை கொண்டும், மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டோம். கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து, பள்ளிகளைத் திறக்க ஆலோசித்து வருகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.