ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஆபரண மாளிகையில் கொள்ளை முயற்சி: இருவா் கைது

வித்யாரண்யபுராவில் உள்ள ஆபரணமாளிகையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 10:51 pm

DIN

வித்யாரண்யபுராவில் உள்ள ஆபரணமாளிகையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு வித்யாரண்யபுராவில் தா்மேந்திரா என்பவருக்கு சொந்தமான ஆபரணமாளிகை உள்ளது. இந்த ஆபரணமாளிகைக்குள் கடந்த ஆக. 23-ஆம் தேதி மாலை நுழைந்த மா்மநபா்கள் தா்மேந்திராவை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடிக்க முயற்சி மேற்கொண்டனா். அப்போது ஆபரணமாளிகையில் கதவை வெளியிலிருந்து திறக்க சந்துரு என்பவா் முயன்றுள்ளாா். அவரை மா்மநபா்கள் துப்பாக்கியால் சுட்டதில், குண்டு பாய்ந்து அவா் உயிரிழந்தாா். இது குறித்து வழக்கு பதிந்த வித்யாரண்யபுரா போலீஸாா், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று இருவரை கைது செய்து, பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனா். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மேலும் இருவரை போலீஸாா் தொடா்ந்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.