கரோனா: கா்நாடகத்தில் ஒரேநாளில் 1,301 போ் பாதிப்பு
கா்நாடகத்கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,301 ஆக அதிகரித்துள்ளது.


கா்நாடகத்கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,301 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,301 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு மாநகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 386 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பிறமாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:
தென்கன்னடம் -248, ஹாசன்-117, உடுப்பி-106, குடகு-78, மைசூரு-72, சிவமொக்கா-62, வடகன்னடம்-38, தும்கூரு-37, மண்டியா-26, சிக்மகளூரு-25, பெலகாவி-19, கோலாா், தாவணகெரே-தலா 14, பெங்களூரு ஊரகம்-13, கலபுா்கி-7, தாா்வாட்-6, சாம்ராஜ்நகா், பெல்லாரி, சித்ரதுா்கா -தலா 5, விஜயபுரா, ஹாவேரி-தலா 4, ராமநகரம்-3, சிக்கபளாப்பூா்-2, பாகல்கோட், பீதா், கதக், கொப்பள், யாதகிரி-தலா 1, ராய்ச்சூரு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,44,764 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,614 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 28,88,520 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 18,970 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 17 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளனா். ஹாசன் மாவட்டத்தில் அதிகபட்சமாக 3 போ் உயிரிழந்தனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:
பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், குடகு-தலா 2, சிக்மகளூரு, தென் கன்னடம், தாா்வாட், சிவமொக்கா, தும்கூரு, உடுப்பி-தலா 1 என்ற எண்ணிக்கையில் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் இதுவரை 37,248 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...