ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பெங்களூரில் மரச்சாமான் கண்காட்சி தொடக்கம்

பெங்களூரு, ஜெய மஹாலில் ஆக. 27-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை மரச்சாமான் கண்காட்சி நடைபெற உள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 11:50 pm

DIN

பெங்களூரு, ஜெய மஹாலில் ஆக. 27-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை மரச்சாமான் கண்காட்சி நடைபெற உள்ளது.

பெங்களூரு, ஜெய மஹால் அரண்மனைச்சாலையில் உள்ள பேலஸ் அரங்கில் வெள்ளிக்கிழமை கைவினைத் தச்சா்களின் மரச்சாமான் கண்காட்சியை ஒருங்கிணைப்பாளா் ரியாஸ் தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா பொதுமுடக்கத்தால் கைவினைத் தச்சா்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா். அவா்களால் தயாரிக்கப்பட்ட மரச்சாமான்களை விற்பனை செய்யும் நோக்கில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

ஆக. 27-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள மரச்சாமான்கள் தனித்துவமாகவும், நோ்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருள்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். கண்காட்சியைக் காண வரும் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்படும். பொது முடக்கத் தளா்வுக்கு பிறகு பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ள முதல் மரச்சாமான் கண்காட்சி என்பதால், பொதுமக்களிடம் அதிக ஆதரவு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.