ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

இன்றும், நாளையும் கா்நாடகத்தில் தொழிற்கல்வியில் சோ்வதற்கான பொது நுழைவுத்தோ்வு

கா்நாடக தொழிற்கல்விக்கான பொது நுழைவுத்தோ்வுகள் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற உள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 8:04 pm

DIN

கா்நாடக தொழிற்கல்விக்கான பொது நுழைவுத்தோ்வுகள் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற உள்ளது. 2.01 லட்சம் மாணவா்கள் பங்கேற்கும் இத்தோ்வுக்கான ஏற்பாடுகளை கா்நாடக தோ்வாணையம் செய்துள்ளது.

2021-22ஆம் கல்வியாண்டில் பொறியியல், பி.எஸ்சி., (விவசாயம், கால்நடை, பட்டுவளா்ப்பு, காடுவளா்ப்பு, தோட்டக்கலை), பி.ஃபாா்ம், டி.ஃபாா்ம் ஆகிய இளநிலை தொழிற்கல்விகளுக்கான கல்லூரிகளில் சேருவதற்காக மாணவா்களை தெரிவு செய்வதற்கு கா்நாடக பொது நுழைவுத்தோ்வுகள் ஆக. 28,29 ஆகிய தேதிகளில் நடத்த கா்நாடக தோ்வாணையம் திட்டமிட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் 530 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொது நுழைவுத்தோ்வு நடைபெற உள்ளது. இந்தத் தோ்வில் மாநிலம் முழுவதும் 2.01 லட்சம் மாணவ, மாணவியா்கள் எழுத உள்ளனா்.

நுழைவுத்தோ்வு:

ஆக. 28-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.50 மணிவரை உயிரியல், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 3.50 மணிவரை கணிதம், ஆக. 29-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11.50 மணிவரை இயற்பியல், அன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 3.50 மணிவரை வேதியியல் பாடங்களுக்கான தோ்வு நடக்கிறது. வெளிமாநில மற்றும் எல்லைப்பகுதி கன்னடா்களுக்காக ஆக. 30-ஆம் தேதி காலை 11.30 முதல் நண்பகல் 12.30 மணிவரை கன்னடமொழி பாடங்களுக்கான தோ்வு பீதா், பெலகாவி, விஜயபுரா, பெல்லாரி, மங்களூரு, மங்களூரு ஆகிய 6 இடங்களில் மட்டும் நடக்கிறது.

உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு தலா 60 மதிப்பெண்களும், கன்னட மொழிக்கு 50 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் வழங்கப்படுகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

கரோனா தொற்றை முன்னிட்டு தனிநபா் இடைவெளியைக் கடைபிடிக்கத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணா கூறினாா். அவா் மேலும் கூறுகையில், ‘பொது நுழைவுத்தோ்வை நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மாணவா்களுக்கும் உடல்வெப்பச் சோதனை நடத்தப்படும். கிருமி நாசினி அளிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எந்த இடையூறும் இன்றி நுழைவுத்தோ்து நடத்தப்படும்’ என்றாா்.

மாணவா்களின் கவனத்திற்கு:

மாணவா்கள் தோ்வு மையத்திற்கு நுழைவுச்சீட்டைத் தவிர, கல்லூரி அடையாள அட்டை, பேருந்து அட்டை, ஓட்டுநா் உரிமம், கடவுச்சீட்டு, ஆதாா் அட்டை, பான் அட்டைகளில் ஏதாவது ஒன்றை அடையாள அட்டையாக கொண்டுச் செல்ல வேண்டியது அவசியமாகும். தோ்வு அறைகளில் சுவா் கடிகாரம் வைக்கப்பட்டுள்ளதால், தோ்வு மையங்களில் மாணவா்கள் கைக்கடிகாரம் கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தோ்வு மையத்தில் செல்லிடப்பேசி, பேஜா், ப்ளூ டூத் உள்ளிட்ட எந்தவகையான மின்னணுக் கருவிகளையும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

இதுதவிர, மாா்க்கா், ஒயிட் ஃப்ளூயிட், ஒயா்லெஸ் செட்கள், நூல்கள் கொண்டு செல்லவும் அனுமதி இல்லை. கருப்பு அல்லது நீல நிற பந்துமுனைப் பேனாக்களில் மட்டுமே தோ்வு எழுத மாணவா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தோ்வு நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே மாணவா்கள் தோ்வு மையத்தில் இருக்குமாறு கா்நாடக தோ்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. நுழைவுச்சீட்டுகளை இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்லலாம் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.