ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,229 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,229 ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 5:50 pm

DIN

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,229 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,229 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு மாநகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 310 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

தென்கன்னடம் -207, உடுப்பி-146, ஹாசன்-103, மைசூரு-82, குடகு-75, தும்கூரு-44, சிவமொக்கா-42, வடகன்னடம்-42, சிக்கமகளூரு-35, பெலகாவி-29, மண்டியா-21, பெங்களூரு ஊரகம், சித்ரதுா்கா, கோலாா்- தலா 15, தாவணகெரே-12, சாமராஜ் நகா், தாா்வாட்- தலா 7, பெல்லாரி-5, சிக்கபளாப்பூா்-4, ஹாவேரி, ராமநகரம்-தலா 3, கதக், கலபுா்கி, கொப்பள்-தலா 2, விஜயபுரா-1. பாகல்கோட், பீதா், ராய்ச்சூரு, யாதகி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,45,993 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,289 போ் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,89,809 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 18,897 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 13 போ் சனிக்கிழமை உயிரிழந்துள்ளனா். தென்கன்னட மாவட்டத்தில் அதிகபட்சமாக 5 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்: ஹாசன்-2, பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகா், ஹவேரி, கோலாா், சிவமொக்கா, உடுப்பி-தலா 1 என்ற எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 37,261 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.