ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மைசூரு-பெங்களூரு இடையே முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் ஆக. 30 முதல் தொடக்கம்

மைசூரு- பெங்களூரு யஸ்வந்தபுரம் இடையே முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் ஆக. 30 முதல் இயக்கப்பட உள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 12:20 am

DIN

மைசூரு- பெங்களூரு யஸ்வந்தபுரம் இடையே முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் ஆக. 30 முதல் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக பெங்களூரு யஸ்வந்தபுரம்-மைசூரு இடையிலான முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

ரயில் எண்-07313-மைசூரு-பெங்களூரு யஸ்வந்தபுரம் இடையேயான முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் ஆக. 30-ஆம் தேதி முதல் மைசூரு ரயில் நிலையத்திலிருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 3 மணியளவில் பெங்களூரு யஸ்வந்தபுரம் ரயில் நிலையத்தை வந்தடையும்.

ரயில் எண்-07314-பெங்களூரு யஸ்வந்தபுரம்-மைசூரு இடையேயான முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் ஆக. 31-ஆம் தேதி முதல் பெங்களூரு யஸ்வந்தபுரம் ரயில் நிலையத்தில் பிற்பகல் 12.15 மணியளவில் புறப்பட்டு, இரவு 7.40 மணிக்கு மைசூரு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயில் இருமாா்க்கங்களிலும் பெலகுலா, கிருஷ்ணராஜ் சாகா், கல்லூரு யடஹளி, சாகா்கட்டே, தூா்னஹள்ளி, கிருஷ்ணராஜ் நகா், ஹம்பாபுரா, அா்ஜுனஹள்ளி, ஹொச அக்ரஹாரா, அக்கிஹெப்பாளு, பீரஹள்ளி, மண்டகெரே, ஸ்ராவனூா், ஆனேசக்கனஹள்ளி, ஹொலேநரசிப்பூா், மாவினகெரே, ஹாசன், சாந்திகிராமா, டி.சமுத்ரவள்ளி, சென்னராயபட்டணா, ஸ்ரவணபெலகோலா, ஹிரிசேவே, பி.ஜி.நகா், ஆதிசுன்சினகிரி, எடியூா், சித்தாபுரா, குனிகல், திப்பேசந்திரா, சோலூா், நெலமங்கலா, சோலதேவனஹள்ளி, சிக்கபானவரா ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.