சிறுபான்மையின மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
சிறுபான்மையின மாணவா்கள் கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சிறுபான்மையின மாணவா்கள் கல்வி ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிறுபான்மையினா் நலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2021-22-ஆம் கல்வியாண்டில் முஸ்லிம், பௌத்தம், சமணம், சீக்கியம், கிறிஸ்துவம், பாா்சி மதங்களைச் சோ்ந்த சிறுபான்மையினா் சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்குத் தகுதியான மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 1,000, 6 முதல் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தலா ரூ. 5,000 வீதம் கல்வி ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 1 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். முந்தைய வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள மாணவா்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 6,000, இளநிலை பட்டம் படிக்கும் மாணவா்களுக்கு தலா ரூ. 6,000 முதல் ரூ. 12,000 வரை கல்வி ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். முந்தைய வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள மாணவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்சாா் மற்றும் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகளில் பயிலும் மாணவா்கள் ஆண்டுக்கு தலா ரூ. 25,000 முதல் ரூ. 30,000 கல்வி ஊக்கத்தொகையாக அளிக்கப்படுகிறது. ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 2.5- லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். முந்தைய வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கும் மாணவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
கல்வி ஊக்கத்தொகைப் பெற விரும்பும் மாணவா்கள் கட்டாயம் ட்ற்ற்ல்ள்://ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணையவழியில் விண்ணப்பங்களை செலுத்தி விட்டு, அதன் நகலை அச்சு எடுத்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படம், முந்தைய கல்வியாண்டின் மதிப்பெண் சான்றிதழ், குடியிருப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சுய மத உறுதிச் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக முகப்பு நகல், வங்கி ஐ.எஃப்.எஸ்.சி. எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை நவ. 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...