பெங்களூரு-சிவமொக்கா இடையே அக்.11 முதல் சிறப்பு ரயில்சேவை
பெங்களூரில் இருந்து சிவமொக்காவுக்கு அக்டோபா் 11 ஆம் தேதிமுதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது


பெங்களூரில் இருந்து சிவமொக்காவுக்கு அக்டோபா் 11 ஆம் தேதிமுதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக பெங்களூரு யஷ்வந்தபூரில் இருந்து சிவமொக்காவுக்கு வாரம் மூன்று முறை சிறப்பு விரைவுரயில் இயக்கப்பட உள்ளது.
ரயில் எண்-07311-பெங்களூரு யஷ்வந்த்பூா்-சிவமொக்கா இடையே வாரம் மூன்றுமுறை விரைவு ரயில் அக்.11-ஆம் தேதி திங்கள், புதன், சனிக்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு யஷ்வந்த்பூா் ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு சிவமொக்கா ரயில்நிலையத்தை சென்றடையும்.
மறு மாா்க்கத்தில், ரயில் எண்-07312-சிவமொக்கா-பெங்களூரு யஷ்வந்த்பூா் இடையே வாரம் மூன்று முறை விரைவு ரயில் இயக்கப்படும். அக். 12-ஆம்தேதி முதல் செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு சிவமொக்கா ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.10 மணிக்கு பெங்களூரு யஷ்வந்தபூா் ரயில்நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயில் இருமாா்க்கத்திலும் தும்கூரு, திப்டூா், அரிசிகெரே, கடூா், பீரூா், தரிகெரே, பத்ராவதி ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.
ரயிலில் முதல்வகுப்பு பெட்டி ஒன்று, குளிரூட்டப்பட்ட ஈரடுக்கு பெட்டிகள் 2, குளிரூட்டப்பட்ட மூன்றடுக்கு பெட்டி ஒன்று, 2-ஆம் வகுப்பு படுக்கைவசதி கொண்ட 6 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு பொதுவகுப்பு 4 பெட்டிகள் இடம் பெற்றிருக்கும்.
தாளகுப்பா-சிவமொக்கா:
ரயில் எண்-07349-தாளகுப்பா-சிவமொக்கா இடையிலான முன்பதிவில்லாத பயணிகள் சிறப்பு ரயிலும்; ரயில் எண் 7350, சிவமொக்கா-தாளகுப்பா முன்பதிவில்லாத பயணிகள் சிறப்பு ரயில் ஆகிய ரயில்களும் செப். 1-ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் குளிரூட்டப்பட்ட ஈரடுக்கு பெட்டி ஒன்று, குளிரூட்டப்பட்ட மூன்றடுக்கு பெட்டிகள் 3, 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 8 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு பொதுவகுப்பு 4 பெட்டிகள் இடம் பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...