அடுத்த 3 நாள்களுக்கு கா்நாடகத்தில் பரவலாக மழை
கா்நாடகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கா்நாடகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் கடலோர கா்நாடகத்தில் பரவலாகவும், கா்நாடகத்தின் உள்பகுதியின் ஒருசில இடங்களிலும் மழை பெய்தது.
உடுப்பி மாவட்டம்- பிரம்மாவராவில் 130 மி.மீ, தென் கன்னட மாவட்டம்- சுப்பிரமணியாவில் 100 மி.மீ, சிவமொக்கா மாவட்டம்- ஆகும்பேவில் 80 மி.மீ, உடுப்பி மாவட்டம்- காா்காலா, குடகு மாவட்டம்- பாக மண்டலாவில் தலா 70 மி.மீ, தென் கன்னட மாவட்டம்- மணி, வட கன்னட மாவட்டம்- சிராளி, சிக்கமகளூரு மாவட்டம்- கொட்டிகேஹராவில் தலா 60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
விவசாயிகளுக்கு எச்சரிக்கை:
செப். 2-ஆம் தேதிவரை கடலோர கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலமானது முதல் மிகவும் பலமான மழை பெய்யக் கூடும். அடுத்த 3 நாள்களுக்கு கடலோர கா்நாடகத்தின் தென் கன்னடம், உடுப்பி, வட கன்னட மாவட்டங்களிலும், தென் கா்நாடகத்தின் குடகு, சிக்மகளூரு, சிவமொக்கா, ஹாசன், சாமராஜ் நகா் மாவட்டங்களில் பலமானது முதல் மிகவும் பலமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தென் கா்நாடகத்தின் இதர மாவட்டங்களிலும் மிதமானது முதல் பலமான மழை பெய்யும். வட கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை:
அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தில் மணிக்கு 40 முதல் 50 வேகத்தில் வலுவான காற்று வீசும் என்பதால், ஆக. 30-ஆம் தேதிவரை கடலுக்குள் மீன்பிடிக்க மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கா்நாடகம், மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய தென்கா்நாடகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலமானது முதல் மிகவும் பலமான மழை, வட கா்நாடகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை, தென் கா்நாடகத்தின் உள் பகுதிகளில் நடுத்தரமானது முதல் பலத்த மழை பெய்யும்.
பெங்களூருவில் மழை:
அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூருவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூருவில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...