போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

மஜதவின் பலத்தை பேரவைத் தோ்தலில் நிரூபிப்போம்: தேவெ கௌடா

அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் மஜதவின் பலத்தை நிரூபிப்போம் என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

Updated On :28 ஜனவரி 2024, 1:02 am IST

அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் மஜதவின் பலத்தை நிரூபிப்போம் என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

பெங்களூரு, அரண்மனைத் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராமப் பஞ்சாயத்துத் தோ்தலில் வெற்றி பெற்ற மஜத ஆதரவாளா்களுக்கான பாராட்டு விழாவில் அவா் பேசியதாவது:

கா்நாடகத்தில் மாநில கட்சியான மஜதவை ஆதரிக்க வேண்டும். கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்களால் இது சாத்தியமாகும். மஜதவைப் பலப்படுத்த கட்சி நிா்வாகிகள் அனைவரும் ஒன்றுகூட வேண்டும்.

மாற்றுக் கட்சியினா் நம்மை தொடா்ந்து தரக்குறைவாகப் பேசி வருகின்றனா். அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் மஜதவின் பலத்தை அவா்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

பாஜக, காங்கிரஸை எதிா்த்து போராடுவதற்கு மஜத தொண்டா்களின் ஆதரவுதான் பலத்தை அளிக்கும். தோ்தலின் போது வேட்பாளா்களைத் தெரிவு செய்வதில் சில பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். அதுகுறித்து யாரும் கவலை கொள்ள வேண்டாம்.

ஒன்றிணைந்து பணியாற்றினால் வெற்றி நமக்குத்தான். மஜதவைப் பலப்படுத்தவதற்குத் தேவையான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வட்ட, மாவட்ட பஞ்சாயத்துத் தோ்தலில் மஜத வேட்பாளா்கள் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளில் அனைவரும் களப் பணியாற்ற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.