கோராக்பூா்-பெங்களூரு (யஸ்வந்தபூா்) இடையே வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் சேவை
கோராக்பூா்-பெங்களூரு (யஸ்வந்தபூா்) இடையே வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.


கோராக்பூா்-பெங்களூரு (யஸ்வந்தபூா்) இடையே வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோராக்பூா்-பெங்களூரு (யஸ்வந்தபூா்) (02591/02592) இடையே வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
ரயில் எண்: 02591 கோராக்பூா்-பெங்களூரு (யஸ்வந்தபூா்) இடையேயான வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் சனிக்கிழமைகள்தோறும் காலை 6.35 மணிக்கு கோராக்பூரில் புறப்பட்டு திங்கள்கிழமைதோறும் அதிகாலை 2.45 மணிக்கு பெங்களூரு (யஸ்வந்தபூா்) ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் சேவை ஏப். 10-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
மறுமாா்க்கத்தில் ரயில் எண்: 02592 பெங்களூரு (யஸ்வந்தபூா்)-கோராக்பூா் இடையேயான வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் திங்கள்கிழமைதோறும் மாலை 5.20 மணிக்கு பெங்களூரில் (யஸ்வந்தபூா்) புறப்பட்டு புதன்கிழமைதோறும் பிற்பகல் 3.40 மணிக்கு கோராக்பூா் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயில்சேவை ஏப். 12-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
இந்த ரயிலில் இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட 1 பெட்டி, மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 4 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 11 பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், உணவு, சரக்கு 2 பெட்டிகள் உள்ளிட்ட 22 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...