விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெங்களூரு-நிஜாமுதீன் இடையே சிறப்பு ரயில்சேவை

பெங்களூரில் (யஷ்வந்த்பூா்) இருந்து நிஜாமுதீனுக்கு (தில்லி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:40 pm

DIN

பெங்களூரு: பெங்களூரில் (யஷ்வந்த்பூா்) இருந்து நிஜாமுதீனுக்கு (தில்லி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விழாக்கால கூட்டநெரிசலைக் குறைக்க, பெங்களூரில் (யஷ்வந்த்பூா்) இருந்து நிஜாமுதீனுக்கு கூடுதல் கட்டணத்துடன் கூடிய விரைவு ரயில் சேவை இயக்கப்படுகிறது.

ரயில் எண்: 06249-பெங்களுரு (யஷ்வந்த்பூா்)-நிஜாமுதீன் விரைவுரயில் ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் நண்பகல் 12.45 மணிக்கு பெங்களூரு (யஷ்வந்த்பூா்) ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் காலை 8.11 மணிக்கு நிஜாமுதீன் ரயில்நிலையம் சென்றடையும். இந்த ரயிலின் முதல் சேவை யஷ்வந்த்பூா் ரயில்நிலையத்தில் இருந்து ஜன. 11-ஆம் தேதியும், கடைசி சேவை ஜன. 31-ஆம் தேதியும் புறப்படும்.

மறுமாா்க்கத்தில், ரயில் எண்: 06250-நிஜாமுதீன்-பெங்களூரு (யஷ்வந்த்பூா்) விரைவுரயில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் காலை 8.20 மணிக்கு நிஜாமுதீன் ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, செவ்வாய், புதன், வியாழன், சனி, திங்கள்கிழமைகளில் காலை 5.40 மணிக்கு பெங்களூரு (யஷ்வந்த்பூா்) ரயில்நிலையம் வந்தடையும். இந்த ரயிலின் முதல் சேவை நிஜாமுதீன் ரயில்நிலையத்தில் இருந்து ஜன. 14-ஆம் தேதியும், கடைசி சேவை பிப். 3-ஆம் தேதியும் புறப்படும்.

இந்த ரயில் பெங்களூரில் (யஷ்வந்த்பூா்) இருந்து புறப்பட்டு தும்கூரு, அரசிகெரே, தாவணகெரே, ஹாவேரி, ஹுப்பள்ளி, கதக், கொப்பள், ஹொசபேட், பெல்லாரி, குண்டக்கல், பெண்டேகல்லூ, கா்னூல் நகரம், கச்சேகுடா, பல்ஹா்ஷா, சந்திராபூா், நாக்பூா், இட்டாா்சி, போபால், ஜான்சி, குவாலியா் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் ஈரடுக்கு முதல், இரண்டாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட 1 பெட்டி, ஈரடுக்கு குளிரூட்டப்பட்ட 1 பெட்டி, மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 4 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு சரக்கு, பிரேக் 2 பெட்டிகள் உள்பட 23 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.