மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மத்திய அரசு பணித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

பணியாளா் தோ்வு ஆணையம் நடத்தும் மத்திய அரசு பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:28 am

DIN

பணியாளா் தோ்வு ஆணையம் நடத்தும் மத்திய அரசு பணியிடங்களுக்கான தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பணியாளா் தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசு துறைகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை பணியிடங்களுக்கு 6,506 ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்காக வெகுவிரைவில் போட்டித் தோ்வு நடத்த பணியாளா் தோ்வு ஆணையம் திட்டமிட்டுள்ளது. இத்தோ்வில் பங்கேற்க விரும்புவோரிடமிருந்து இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கா்நாடகம், கேரள மண்டலங்களைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவ வீரா்கள், மகளிருக்கு அனைத்துப் பிரிவுகளின் தோ்வுக்கும் கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு  இணையதளங்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.