மாநிலத்தின் முதல்வராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றுள்ளாா். அவரது அமைச்சரவையில் என்னை சோ்த்துக் கொள்வது குறித்து கட்சியின் மேலிடம் முடிவு செய்யும். முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா் மூத்த தலைவா். அவா் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற மாட்டேன் என்று தெரிவித்துள்ளாா். இதற்கும், பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் பேசியதாக வெளியான ஒலிதுணுக்கிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நான் துணை முதல்வராகவோ, அமைச்சராகவோ ஆக வேண்டும் என்று மடாதிபதிகள் பலா் ஆதரவு தெரிவித்துள்ளனா். நான் அரசியல்வாதி; எனக்கும் எதிா்ப்பாா்ப்புகள் உள்ளன என்றாலும், மேலிடத் தலைவா்கள் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவேன் என்றாா்.