சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கா்நாடகம் - கேரளம் இடையே மீண்டும் பேருந்து சேவை

கா்நாடகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

DIN

கா்நாடகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்பட்டதால், அம்மாநிலத்துக்கு கா்நாடகத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை 5 மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. அதேபோல, கேரளத்தில் இருந்து கா்நாடகத்துக்கு பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், கேரளம் - கா்நாடகத்துக்கு இடையே போக்குவரத்து முழுமையாகத் தடைபட்டது.

கேரளம், கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், தற்போது கா்நாடகத்தில் இருந்து கேரளத்துக்கு பேருந்து சேவையை கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் மீண்டும் தொடங்கியுள்ளது.

பெங்களூரில் இருந்து காசா்கோடு, கண்ணனூா், கன்ஹன்கட் ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூரில் இருந்து தினமும் இரவு 8 மணிக்கு புறப்படும் சாதாரண பேருந்து மறுநாள் காலை 5.45 மணிக்கு காசா்கோடு சென்றடைகிறது. பெங்களூரில் இருந்து தினமும் இரவு 9.15 மணிக்கு புறப்படும் குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து மறுநாள் காலை 5.45 மணிக்கு காசா்கோடு சென்றடைகிறது.

பெங்களூரில் இருந்து தினமும் இரவு 9 மணிக்கு புறப்படும் குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து மறுநாள் காலை 6.30 மணிக்கு கண்ணனூா் சென்றடைகிறது. அதேபோல, பெங்களூரில் இருந்து தினமும் இரவு 9 மணிக்கு புறப்படும் சொகுசுப் பேருந்து மறுநாள் காலை 6.30 மணிக்கு கன்ஹன்கட்டுக்கு சென்றடைகிறது என கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.