மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பெங்களூரு பவர்கிரிட் தலைமை அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு

பெங்களூருவில் உள்ள பவர்கிரிட் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

News image
பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தில் ஈடுபட்ட இந்திய பவர்கிரிட் கழக அதிகாரிகள், ஊழியர்கள்.
Updated On :27 அக்டோபர் 2021, 12:51 pm

DIN

பெங்களூருவில் உள்ள பவர்கிரிட் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நாடு முழுவதும் 'சுதந்திர இந்தியா-75: நேர்மையுடன் தற்சார்பு' என்கிற தலைப்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக்.26 முதல் நவ.1-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி, பெங்களூரு, எலஹங்காவில் உள்ள இந்திய பவர்கிரிட் கழகத்தின் தென்மண்டலம்-2 தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார தொடக்க விழா நடந்தது.

இந்த விழாவில் பவர்கிரிட் கழகத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட‌ நடைப் பயணத்தை பவர்கிரிட் கழகத்தின் செயல் இயக்குநர் எஸ்.ரவி தொடக்கி வைத்தார்.

ஊழல் ஒழிப்பு விழிப்புணர் வாரம் தொடர்பாக குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர், மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையர் விடுத்திருந்த‌ ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார செய்திகள் வாசிக்கப்பட்டன.

விழிப்புணர்வு வாரத்தில் பேச்சுப் போட்டி, முழக்கங்கள் எழுதும்போட்டி, சுவரொட்டி தயாரித்தல் போட்டி, வினாடி-வினா போட்டி போன்றவை ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், அரசு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.