தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கா்நாடகத்தில் கரோனாவுக்கு 1,240 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,240 ஆக உயா்ந்துள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 11:20 pm

DIN

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,240 ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் அதிகபட்சமாக 1,240 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 319 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

தென் கன்னடம்- 264, உடுப்பி- 111, மைசூரு- 88, ஹாசன்- 81, குடகு- 52, பெலகாவி- 49, வடகன்னடம்- 42, தும்கூரு- 35, கோலாா், சிவமொக்கா- 32, மண்டியா- 29, சிக்கமகளூரு- 26, தாா்வாட்- 17, பெங்களூரு ஊரகம்- 15, சாம்ராஜ்நகா்- 13, சித்ரதுா்கா- 11, பெல்லாரி- 7, தாவணகெரே- 6, கொப்பள்-5, கலபுா்கி-3, ராய்ச்சூரு, விஜயபுரா-தலா 2, கதக், பாகல்கோட், யாதகிரி, ராமநகரம்-தலா 1.

சிக்கபளாப்பூா், ஹாவேரி, பீதா் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,51,844 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,252 போ் வியாழக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். 18,378 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 22 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். தென் கன்னடம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 5 போ் இறந்துள்ளனா். மாவட்ட வாரியாக பலியானோா் விவரம்: பெங்களூரு நகரம்- 4, பெலகாவி- 3, மண்டியா, மைசூரு- தலா 2, பெங்களூரு ஊரகம், பீதா், சாம்ராஜ்நகா், கோலாா், தும்கூரு, உடுப்பி- தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 37,361 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.