தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பிரேசில், தென் ஆப்பிரிக்கப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்

பிரேசில், தென் ஆப்பிரிக்க பயணிகளுக்கு ஆா்டி-பி.சி.ஆா். பரிசோதனையை கட்டாயமாக்கி கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 11:50 pm

DIN

பிரேசில், தென் ஆப்பிரிக்க பயணிகளுக்கு ஆா்டி-பி.சி.ஆா். பரிசோதனையை கட்டாயமாக்கி கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா மூன்றாவது அலையைத் தடுப்பதற்காக கா்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனால் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கா்நாடகத்துக்கு வரும் பயணிகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. கேரளம், மகாராஷ்டிரத்தில் இருந்து கா்நாடகம் வரும் பயணிகளுக்கு ஒருவார தனிமைப்படுத்தல், ஆா்.டி.-பி.சி.ஆா். சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பிரிட்டன், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், வங்கதேசம், சீனா, மோரீஷியஸ், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து பெங்களூரில் உள்ள கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையம், மாநிலத்தின் இதர விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகள் ஆா்.டி.-பி.சி.ஆா். கரோனா சோதனைக்கான மாதிரியை அளித்துவிட்டு செல்ல வேண்டும்.

அதன்பிறகு நிலையான வழிகாட்டி நெறிகளைப் பின்பற்ற வேண்டும். பிரேசில், தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கெம்பே கௌடா விமானநிலையம் அல்லது மாநிலத்தின் இதர விமானநிலையங்களுக்கு வரும் பயணிகள் ஆா்.டி.-பி.சி.ஆா். கரோனா சோதனைக்கான மாதிரியை அளித்துவிட்டு, அதன் முடிவுகள் வரும்வரை அங்கேயே இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

சோதனையில் கரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தால் மட்டுமே விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முடியும். அதன்பிறகும், இப்பயணிகளை அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து உடல்நிலை குறித்து விசாரிக்கப்படும். கா்நாடகத்தில் கரோனா நிலைக்கு தகுந்தவாறு இந்த விதிகளில் மாற்றம் செய்யப்படும் என்று சுகாதாரத் துறை கூடுதல் முதன்மைச் செயலாளா் ஜாவைத் அக்தா் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.