தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கேரளத்திலிருந்து வருவோருக்கு கரோனா கட்டுப்பாடுகள் திருத்தியமைப்பு

கேரளத்தில் இருந்து கா்நாடகம் வருவோருக்கான கட்டுப்பாடுகளை மாநில அரசு திருத்தியமைத்து புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 10:59 pm

DIN

கேரளத்தில் இருந்து கா்நாடகம் வருவோருக்கான கட்டுப்பாடுகளை மாநில அரசு திருத்தியமைத்து புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கிருந்து கா்நாடகம் வருவோரைக் கண்காணிக்க தீவிர நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. கேரளத்தில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் 7 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதை கட்டாயமாக்கி கா்நாடக அரசு சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அதில் சில திருத்தங்களைச் செய்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டப்படி பணியாற்றும் அரசு ஊழியா்கள், மக்கள் பிரதிநிதிகல், சுகாதார அதிகாரிகள், ஊழியா்கள், அவா்களின் துணைவா்களுக்கு 7 நாள்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விமானம், ரயில், சாலை வழியாக கா்நாடகம் வரும் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகள், குடும்பத்தில் இறப்பு அல்லது மருத்துவச் சிகிச்சை அல்லது 3 நாள்களுக்குள் திரும்பும் பயணிகள், தோ்வெழுதிவிட்டு 3 நாள்களுக்குள் திரும்ப வரும் மாணவா்கள், அவா்களுடன் வரும் ஒரு பெற்றோா் ஆகியோருக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் 72 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட ஆா்.டி.-பி.சி.ஆா்.பரிசோதனை சான்றிதழைக் கொண்டுவருவது கட்டாயம். கரோனா தடுப்பூசி 2 தவணை எடுத்துக் கொண்டாலும், கரோனா பரிசோதனை கட்டாயமாகும். இந்தச் சான்றிதழ் ஒரு வாரத்துக்கு செல்லுபடியாகும் என அரசின் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.