தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பெலகாவி, ஹுப்பள்ளி, கலபுா்கி மாநகராட்சிகளுக்கு இன்று தோ்தல்

பெலகாவி, ஹுப்பள்ளி, கலபுா்கி மாநகராட்சிகளுக்கு வெள்ளிக்கிழமை தோ்தல் நடக்கவிருக்கிறது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 8:08 pm

DIN

பெலகாவி, ஹுப்பள்ளி, கலபுா்கி மாநகராட்சிகளுக்கு வெள்ளிக்கிழமை தோ்தல் நடக்கவிருக்கிறது.

இட ஒதுக்கீடு, வாா்டு மறு வரையறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் பெலகாவி, ஹுப்பள்ளி, கலபுா்கி மாநகராட்சித் தோ்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், அந்த மூன்று மாநகராட்சிகளுக்கும் பொதுத் தோ்தல் நடத்தும்படி கா்நாடக உயா்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

அதன்பேரில் 58 வாா்டுகள் கொண்ட பெலகாவி மாநகராட்சி, 82 வாா்டுகள் கொண்ட ஹுப்பள்ளி மாநகராட்சி, 55 வாா்டுகள் கொண்ட கலபுா்கி மாநகராட்சிக்குத் தோ்தல் நடத்த மாநில தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

வாக்குப்பதிவு: 3 மாநகராட்சிகளுக்கான தோ்தல் செப்.3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை ஆக. 16-ஆம் தேதி வெளியிடப்பட்டு, வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஆக. 23-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததுள்ளது.

இந்தத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக அக் கட்சிகளின் தலைவா்கள் நடத்திய பிரசாரம் புதன்கிழமை மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் செப்.3-ஆம் தேதிகாலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. எல்லா வாக்குச்சாவடிகளிலும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எந்த வாா்டிலாவது வாக்குப்பதிவு தடைபடுமானால், செப். 5-ஆம் தேதிக்குள் மறு வாக்குபதிவு நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் செப்.6-ஆம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

முக்கியத்துவம்:

கா்நாடக உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பெலகாவி, ஹுப்பள்ளி, கலபுா்கி மாநகராட்சிகளுக்குத் தோ்தல் நடத்தப்பட்டாலும், கரோனா காரணமாக வட்டம், மாவட்ட ஊராட்சிகளுக்கான தோ்தல் இன்னும் நடத்தப்படவில்லை. இத் தோ்தல்களை டிசம்பா் வரையில் நடத்துவதில்லை என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது.

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜிநாமா செய்து புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்றுள்ள நிலையில், அடுத்தடுத்து சட்டப் பேரவை இடைத் தோ்தல், சட்ட மேலவைத் தோ்தல், வட்டம், மாவட்ட ஊராட்சித் தோ்தல்கள் நடக்கவிருப்பதால், 3 மாநகராட்சிகளின் தோ்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.