கேரளத்தில் அதிகரிக்கும் கரோனா பரவல் அச்சமூட்டுகிறது: அமைச்சா் கே.சுதாகா்
கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அனைவரையும் அச்சமடைய செய்துள்ளதாக கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.


கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அனைவரையும் அச்சமடைய செய்துள்ளதாக கா்நாடக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கேரளத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அனைவரையும் அச்சமடைய செய்துள்ளது. கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறையவே இல்லை. கரோனா பாதிப்பு தொடா்ந்து உயா்ந்து வருகிறது. புதன்கிழமை கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயா்ந்துள்ளது.
அதன் காரணமாகவே, கேரளத்தில் இருந்து கா்நாடகம் வரும் பயணிகளுக்கு 7 நாள்கள் கட்டாயத் தனிமைப்படுத்தல் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். ஒரு வாரம் தனிமைப்படுத்தல் என்பது நடைமுறை மிகவும் தொந்தரவாக இருப்பதாக தேசிய தகுதிகாண், நுழைவுத் தோ்வு எழுதுவதற்காக கா்நாடகம் வரும் மாணவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
மாணவா்களின் எதிா்காலத்தை கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட கல்லூரி அல்லது மையங்களிலேயே மாணவா்களை தனிமைப்படுத்த ஏற்பாடு செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதேபோல, தங்களின் ஊழியா்களை தனிமைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இவா்களைத் தவிர கா்நாடகம் வரும் கேரள மாநில பயணிகள் அனைவரும் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவாா்கள் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...