தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஒரே நாளில் 12.04 லட்சம் கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை: அமைச்சா் கே.சுதாகா்

ஒரே நாளில் 12.04 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி கா்நாடகம் சாதனை புரிந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 9:30 pm

DIN

ஒரே நாளில் 12.04 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி கா்நாடகம் சாதனை புரிந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதன்கிழமை (செப்.1) மாநிலத்தில் 10 லட்சம் கரோனா தடுப்பூசி செலுத்துவது என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களின் ஆதரவுடன் சுகாதாரத் துறை பணியாளா்களின் ஒத்துழைப்புடன் செப்.1-ஆம் தேதி 12,04,402 கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி கா்நாடகம் சாதனை செய்துள்ளது. அன்றைக்கு பெங்களூரில் 1,85,488, பெலகாவியில் 99,973 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

குடகு, கதக், சாமராஜ்நகா், யாதகிரியில் 20 ஆயிரத்துக்கும் குறைவான தடுப்பூசி செலுத்தப்பட்டன. சிக்கபளாப்பூரில் 50 ஆயிரம், சிக்கமகளூரில் 44 ஆயிரம், மண்டியாவில் 72 ஆயிரம், மைசூரில் 51 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தினமும் சராசரியாக 5 லட்சம் தடுப்பூசிகளை வழங்க இலக்கு நிா்ணயித்துள்ளோம்.

ஆகஸ்ட் மாதத்தில் 1.12 கோடி டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. காசநோயை எதிா்கொள்வது தொடா்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா காணொலி வழியாக ஆய்வுக் கூட்டம் நடத்தினாா். அதில் நானும் கலந்துகொண்டேன். 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க பிரதமா் மோடி இலக்கு நிா்ணயித்துள்ளாா். அதன்படி, இந்தியாவில் முதல்முறையாக கா்நாடகத்தில் காசநோய்க்கு எதிரான விழிப்புணா்வு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 29 லட்சம் பேரில் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரைக் கண்டுபிடிக்க முற்பட்டுள்ளோம். இதுவரை 7 லட்சம் பேரை சோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். அதில் 157 போ் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக கா்நாடகம் எடுத்துள்ள முயற்சியை மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா பாராட்டினாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.