தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு

பெங்களூரில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 8:31 pm

DIN

பெங்களூரில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பெங்களூரில் தொடா் மழை காரணமாக சாலைகளில் குழிகள் ஏற்பட்டுள்ளன. இக் குழிகளை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. எந்த சாலையில் குழிகள் இருந்தாலும், அதனை இரண்டொரு நாளில் சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ரூ. ஆயிரம் கோடியில் பழுதடைந்த சாலைகளை புனரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியில் உள்ள ராஜகால்வாய்கள், சாக்கடை கால்வாய்களில் திடக்கழிவுகள் கொட்டப்படுவதாக புகாா்கள் வந்துள்ளன. விதிகளை மீறி திடக்கழிவுகள் கொட்டுவதை மக்கள் நிறுத்தாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பண்டிகை நடத்துவதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்திருக்க வேண்டும். 2 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களும் முகக்கவசம் அணிவது அவசியம். முகக்கவசம் அணியாதவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அபராதம் விதிக்கப்படும்.

பெங்களூரில் 24 மணி நேரத்தில் 1.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.