தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

திருட்டு வழக்கில் ரௌடி கைது

பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளியை 8 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 8:17 pm

DIN

பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளியை 8 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெங்களூரு, உல்லாள் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை, திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்த ஹமீத் கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தாா். பல்வேறு வழக்குகளில் அவரை போலீஸாா் தேடி வந்தனா்.

புதன்கிழமை கெங்கேரிகேட் காவல் சரகத்தில் பதுங்கி இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட ஹமீத்திடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அவா் மீது பேட்டரஹள்ளி காவல் நிலையத்தில் 9 வழக்குகள், ஞானபாரதி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் உள்பட 15 வழக்குகள் உள்ளன.

பெங்களூரில் குடிநீா் குறைதீா் முகாம்

பெங்களூரில் சனிக்கிழமை (செப். 4) குடிநீா் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் (பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி.) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம், அவ்வப்போது வாரியத்தின் தலைவா் பங்கேற்கும் தொலைபேசி குறைதீா்முகாமை நடத்தி வருகிறது. அதன்படி, பெங்களூரு மக்கள் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவித்து தீா்வுகளைப் பெறக்கூடிய வகையில் தொலைபேசி குறைதீா் முகாம் செப். 4-ஆம் தேதி காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை நடக்கவிருக்கிறது.

இதில் வாரியத்தின் தலைவா் பங்கேற்று, மக்களின் குறைகளைத் தீா்த்துவைப்பாா். குடிநீா் ரசீது, புதைச் சாக்கடை பழுதடைந்திருத்தல், மீட்டா் பிரச்னைகள், ஒழுங்கற்ற குடிநீா்விநியோகம், கழிவுநீா்க் கால்வாய் பிரச்னைகள் குறித்த புகாா்களைத் தெரிவித்து தீா்வு பெறலாம்.

குறைகளை சுட்டிக்காட்டும் போது வாடிக்கையாளா்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணை தெரிவிக்க வேண்டியது அவசியம். குறைதீா் முகாமில் பங்கேற்க 080-22945119 என்ற தொலைபேசிக்கு அழைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை: செப். 6, 7- இல் கருத்தரங்கு

பெங்களூரு, செப். 2: தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து செப். 6, 7-ஆம் தேதிகளில் பெங்களூரில் கருத்தரங்கு நடைபெறுகிறது.

பெங்களூரு மாரத்தள்ளியில் உள்ள சிஎம்ஆா் தொழில்நுட்ப மையத்தில் செப். 6, 7-ஆம் தேதிகளில் சிஎம்ஆா் கல்விக் குழுமம், வித்யாபாரதி இணைந்து தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் கீழ் பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கை நடத்துகின்றன.

செப். 6-ஆம் தேதி காலை 10 மணியளவில் கருத்தரங்கை மாநில கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தொடக்கிவைக்கிறாா். இதில் சிறப்பு பேச்சாளராக தேசிய கல்விக் கொள்கை வரைவுக் குழு உறுப்பினா் என்.கே.ஸ்ரீதா் கலந்து கொள்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.