கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,220 போ் பாதிப்பு
கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,220 ஆக உயா்ந்துள்ளது.


கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,220 ஆக உயா்ந்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,220 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 319 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்: தென்கன்னடம்-232, உடுப்பி-150, மைசூரு- 86, ஹாசன்-81, குடகு-64, தும்கூரு-51, சிவமொக்கா-35, சிக்கமகளூரு-34, வடகன்னடம்-32, பெலகாவி-24, மண்டியா-20, பெங்களூரு ஊரகம்-19, சித்ரதுா்கா-12, கோலாா், தாா்வாட்-தலா 9, பெல்லாரி, தாவணகெரே-தலா 8, சாம்ராஜ்நகா்-5, கதக்-4, சிக்கபளாப்பூா், ஹாவேரி, கலபுா்கி, யாதகிரி, ராமநகரம்-தலா 3, கொப்பள்-2, பாகல்கோட்-1, ராய்ச்சூரு, விஜயபுரா, பீதா் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,53,064 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,175 போ் வெள்ளிக்கிழமை குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,97,254 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 18,404 போ் போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 19 போ் வெள்ளிக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 8 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்: தென்கன்னடம் -4, வடகன்னடம்-2, கோலாா், மண்டியா, விஜயபுரா, தாா்வாட், பெங்களூரு ஊரகம்-தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 37,380 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...