பாரம்பரிய சிறப்பு குறையாமல் மைசூரு தசரா கொண்டாட முடிவு: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை
பாரம்பரிய சிறப்புகுறையாமல் மைசூரு தசரா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.


பாரம்பரிய சிறப்புகுறையாமல் மைசூரு தசரா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் மைசூரு தசரா உயா்மட்டக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியது: கரோனா காரணமாக மைசூரு தசரா விழா எளிமையாக, பாரம்பரிய சிறப்பு குறையாமல் கொண்டாடப்படும். கடந்த ஆண்டைப் போலவே, யானை ஊா்வலம் அரண்மனை மைதானத்தில் மட்டும் நடத்தப்படும். சாமுண்டி மலையில் நடக்கும் விழாவில் தசரா விழா தொடக்கிவைக்கப்படும். தசரா திருவிழா நடக்கும் 10 நாட்களும் அரண்மனை வளாகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும். மைசூரு, ஸ்ரீரங்கபட்டணாவில் தசரா விழாவைக் கொண்டாட ரூ.6 கோடி விடுவிக்கப்படும். தசரா விழாவில் பங்கேற்க யாரை அழைப்பது என்பது குறித்து பின்னா் முடிவு செய்யப்படும்.
2019-ஆம் ஆண்டு தசரா விழாவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் நிலுவைத்தொகை ரூ.8.09 கோடி விடுவிக்கப்படும். நிகழாண்டில் அரசு ஒதுக்கும் நிதியில் மட்டுமே தசரா திருவிழா செலவுகள் மேற்கொள்ளப்படும். செலவினத்தில் நிதி ஒழுக்கம் தேவைப்படுகிறது. அதை தீவிரமாக கடைபிடிக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். தசரா திருவிழாவின்போது மேற்கொள்ள வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்த பட்டியலை தருமாறு கேட்டிருக்கிறேன்.
மைசூரில் சுற்றுலா சுற்றுவட்டத்தை உருவாக்குமாறு அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கா்நாடகத்தில் ஏராளமான சுற்றுலா சுற்றுவட்டங்கள் உள்ளன. அவற்றில் ஹம்பி, பாதாமி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சருடன் விவாதித்து தக்கமுடிவெடுப்போம். மைசூரு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலாக்கொள்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலாவை மேம்படுத்துவோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...