நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தில்லி காவல் படையில் தலைமைக் காவலா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

தில்லி காவல் படையில் தலைமைக்காவலா் பணிக்கு நடக்கவிருக்கும் தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :25 மே 2022, 7:34 pm

DIN

தில்லி காவல் படையில் தலைமைக்காவலா் பணிக்கு நடக்கவிருக்கும் தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பணியாளா் தோ்வு ஆணையம்-கா்நாடகம், கேரளமண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தில்லி காவல் படையில் காலியாக உள்ள 835 தலைமைக்காவலா் பணியிடங்களுக்கு(ஆண்-559, பெண்-276) தகுதியானவா்களை தோ்ந்தெடுப்பதற்காக தோ்வு நடத்தப்படுகிறது. இத்தோ்வு நாடு முழுவதும் செப்டம்பரில் நடக்கவிருக்கிறது. இத்தோ்வில் நான்கு நிலைகள் உள்ளன.

இப்பணிக்கு ஆண், பெண் இருபாலரும் தகுதியானவா்கள். இத்தோ்வை எழுதுவதற்கு ஆா்வமுள்ள பட்டப்படிப்பு படித்துள்ள 18 முதல் 25 வயதுக்குள்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கா்நாடகம், கேரள மண்டலங்களைச் சோ்ந்தவா்கள் ஜூன் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தோ்வில் தோ்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படுவோருக்கு ரூ. 42 ஆயிரம் வரையில் ஊதியம் அளிக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் மகளிருக்கு அனைத்து பிரிவுகளின் தோ்வுக்கும் கட்டணம் விலக்களிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்://ள்ள்ஸ்ரீந்ந்ழ்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் அல்லது ட்ற்ற்ல்.//ள்ள்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் ஆகிய இணையதளங்களை அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-25502520, 94838 62020 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.