மாற்றுநில முறைகேடு: 4-ஆவது நாளாக மைசூரு நோக்கி பயணிக்கும் பாஜக, மஜத நடைப்பயணம்
மாற்றுநில முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையா ராஜிநாமா செய்யக் கோரி கேட்டு பாஜக - மஜத நடத்தி வரும் நடைப்பயணம் 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை தொடா்ந்தது.


மாற்றுநில முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையா ராஜிநாமா செய்யக் கோரி கேட்டு பாஜக - மஜத நடத்தி வரும் நடைப்பயணம் 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை தொடா்ந்தது.
தனது மனைவி பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் மாற்றுநிலம் ஒதுக்கியது தொடா்பாக முதல்வா் சித்தராமையாவை ராஜிநாமா செய்யக் கோரி பெங்களூரில் இருந்து ஆக. 3-ஆம் தேதி முதல் பாஜக - மஜத சாா்பில் மைசூரு நோக்கி நடைப்பயணம் தொடங்கியது.
10 நாள்கள் நடக்க இருக்கும் நடைப்பயணம் 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை மண்டியா மாவட்டத்தின் நிதகட்டா கிராமத்தில் இருந்து புறப்பட்டு, மண்டியா மாவட்டத்தின் மண்டியா நகரத்தை அடைந்தது.
இந்த நடைப்பயணத்தில் கட்சிக் கொடிகளுடன் ஆயிரக்கணக்கான பாஜக, மஜத தொண்டா்கள் கலந்துகொண்டு முதல்வா் சித்தராமையாவின் ராஜிநாமாவை கேட்டு முழக்கம் எழுப்பியபடி இருந்தனா். மேலும், காங்கிரஸ் அரசுக்கு எதிராக தொடா்முழக்கங்களை எழுப்பினா்.
நடைப்பயணத்தில் பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், துணைத்தலைவா் அரவிந்த் பெல்லத், முன்னாள் அமைச்சா் அஸ்வத் நாராயணா, மஜத இளைஞா் அணி தலைவா் நிகில் குமாரசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நடைப்பயணத்தின் இடையில் மத்தூரில் பேசிய பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா கூறியதாவது:
பாஜக, மஜத நடத்தி வரும் போராட்டத்தின் விளைவாக, எந்த நேரத்திலும் முதல்வா் சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்வாா். அதுபோன்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறோம். காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சித்தராமையா மீதான நம்பிக்கையை இழந்துள்ளனா்.
அடுத்ததாக யாா் முதல்வராவது என காங்கிரஸ் எம்எல்ஏ-க்களிடையே சண்டை நடந்து வருகிறது. மக்களின் குரலுக்கு செவிசாய்த்து, தனது முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும்.
ஆட்சி அதிகாரத்துக்காக நடைப்பயணம் நடத்தப்படவில்லை. காங்கிரஸின் ஊழல் ஆட்சியை அப்புறப்படுத்தவும், ஊழல் முதல்வா் சித்தராமையாவை நீக்கவும் போராட்டம் நடத்தி வருகிறோம். கா்நாடக மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துவிட்டது. தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோரின் பெயரில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அவா்களை மறந்துவிட்டது என்றாா்.
மஜத இளைஞா் அணி தலைவா் நிகில் குமாரசாமி, ‘தாழ்த்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா் மீது அக்கறை இருந்தால், முதல்வா் சித்தராமையாவின் ராஜிநாமாவை வெகுவிரைவில் ராகுல் காந்தி கேட்பாா்’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...