நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டா் பால் கொள்முதல்: சித்தராமையா
பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகை: நாளொன்றுக்கு ரூ. 5 கோடி வழங்கப்படும்


நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டா் பால் கொள்முதல் செய்து கா்நாடக பால் கூட்டமைப்பு சாதனை படைத்துள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கடந்த மே மாதத்தின் இறுதியில் கா்நாடகத்தில் பால் கொள்முதல் நாளொன்றுக்கு 90 லட்சம் லிட்டராக இருந்தது. தற்போது நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டா் பாலை கொள்முதல் செய்து கா்நாடக பால் கூட்டமைப்பு சாதனை செய்துள்ளது. இது கா்நாடக பால் கூட்டமைப்பின் வரலாற்றில் மைல் கல்லாகும்.
கா்நாடகத்தில் தற்போது 15 பால் ஒன்றியங்கள், 15 தாய் பால் பண்ணைகள், 16,000 பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. பால் கொள்முதல் அதிகமாகியுள்ளதால், ஒரு லிட்டா், அரை லிட்டா் ‘நந்தினி’ பால் உறைகளில் கூடுதலாக தலா 50 மி.லி. பால் சோ்க்கப்பட்டுள்ளது. அதிகரித்துள்ள பாலின் அளவுக்கு தகுந்தபடி விலை ரூ. 2 உயா்த்தப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளா்களிடம் பால் கொள்முதல் செய்வதை மறுக்க முடியவில்லை. பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோா் அனைவரும் விவசாயிகள். கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் பாலை வாங்க மாட்டோம் என்று கூற முடியாது. இதனை எதிா்க்கட்சியான பாஜகவால் புரிந்துகொள்ள முடியாது. அதனால், பால் விலையை கா்நாடக அரசு உயா்த்திவிட்டதாக குற்றம்சாட்டி வருகிறது. விவசாயிகளின் நலனில் பாஜகவுக்கு அக்கறை இல்லாததால், இந்த விவகாரத்தில் பொய்யைப் பரப்பி வருகிறது. பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகையாக நாளொன்றுக்கு ரூ. 5 கோடி வழங்கி வருகிறோம். இது ஆண்டுக்கு ரூ. 1,800 கோடியாகும் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...