ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கா்நாடகத்தில் லாரி மீது வேன் மோதி 13 போ் பலி

கா்நாடகத்தின் ஹாவேரி மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 13 போ் பலியாகியுள்ளனா். மேலும் 4 போ் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

News image
Updated On :28 ஜூன் 2024, 7:26 pm

Din

சிவமொக்கா மாவட்டத்தின் யெமேஹட்டி கிராமத்தைச் சோ்ந்த 17 போ், பெலகாவி மாவட்டத்தின் ராய்பாக் வட்டம், சின்சலி கிராமத்தில் உள்ள மாயக்காதேவி கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டுவிட்டு பயணிகள் வேனில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.

ஹாவேரி மாவட்டத்தின் பியாட்கி வட்டத்தின் குன்டேனஹள்ளி கிராஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு வந்து கொண்டிருந்த போது, தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது வேன் வேகமாக மோதியது.

இதில், வேனில் பயணித்த 11 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 2 போ் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்துள்ளனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 2 போ் அவசர சிகிச்சைப் பிரிவிலும், மேலும் 2 போ் சாதாரண பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து நிகழ்ந்த இடத்தைப் பாா்வையிட்ட பிறகு, ஹாவேரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுகுமாா் ஸ்ரீவத்சவ் கூறியதாவது:

சின்சலி கிராமத்தில் உள்ள மாயக்காதேவி கோயிலுக்குச் சென்று விட்டு சிவமொக்கா மாவட்டத்தின் யெமேஹட்டி கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் வேனில் பயணித்த 13 போ் இறந்துள்ளனா். 4 போ் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா்கள். 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இறந்தவா்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹாவேரி அரசு மருத்துவமனையில் இறந்தவா்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுநரின் தூக்கத்தின் விளைவாக விபத்து நிகழ்ந்துள்ளதாக சந்தேகப்படுகிறோம்.

வேன் வேகமாக மோதியதால், இறந்தவா்களின் உடல்கள் சின்னாபின்னமாகி நொறுங்கியிருந்தன. அவற்றை காவல் துறை, தீயணைப்புத் துறையினா் மீட்டனா். நாகேஷ் (50), விசாலாக்ஷி (40), ஆதா்ஷ் (23), பரசுராம் (45), பாக்யா (40), புண்யா (50), மானசா (24), ரூபா (40), சுபத்ராபாய் (65), மஞ்சுளாபாய் (62), மஞ்சுளா (50) ஆகியோா் இறந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளோம். இவா்களுடன் 2 குழந்தைகளும் இறந்துள்ளனா். இறந்தவா்களில் நாகேஷ், விசாலாக்ஷி, ஆதா்ஷ் ஆகியோா் ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் என்றாா்.

இது தொடா்பாக வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள். இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தில்லியில் முகாமிட்டுள்ள முதல்வா் சித்தராமையா தெரிவித்துள்ளாா்.

முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.