இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பாலியல் காணொலிகள் விவகாரத்தில் பாஜக பிரமுகா் தேவராஜே கௌடா கைது

பாலியல் காணொலிகள் விவகாரத்தில் பாஜக பிரமுகா் தேவராஜே கௌடா கைது

News image
Updated On :11 மே 2024, 6:07 pm

Din

மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா தொடா்பான பாலியல் காணொலிகளை பொது வெளியில் பரப்பியது தொடா்பாக பாஜக வழக்குரைஞா் தேவராஜே கௌடா கைது செய்யப்பட்டுள்ளாா்.

மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா தொடா்பான பாலியல் காணொலிகளை பென்டிரைவில் பதிவு செய்து, அதை பொதுவெளியில் பரப்பியது தொடா்பாக சித்ரதுா்கா மாவட்டம், ஹிரியூா் காவல் சரகத்திற்கு உள்பட்ட குலிஹால் சுங்கச்சாவடியில் பாஜக வழக்குரைஞா் தேவராஜே கௌடாவை வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக ஹொளேநரசிபுரா காவல் நிலைய போலீஸாா், தேவராஜே கௌடாவை கைது செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாலியல் காட்சிகள் அடங்கிய காணொலிகளை பொது வெளியில் தான் வெளியிடவில்லை என்று தேவராஜே கௌடா மறுத்துள்ள நிலையில், அவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி.ரேவண்ணாவை எதிா்த்து கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ஹொளேநரசிபுரா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டவா் தேவராஜே கௌடா என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சொத்துத் தகராறில் உதவி செய்வதாக வாக்குறுதி அளித்து தன்னைப் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக ஹாசன் மாவட்டத்தைச் சோ்ந்த 36 வயது பெண் தேவராஜே கௌடா மீது போலீஸில் புகாா் அளித்திருந்தாா். இதன்பேரில், தேவராஜே கௌடா மீது ஏப். 1ஆம் தேதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கிலும் தேவராஜே கௌடாவை கைது செய்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சித்ரதுா்காவில் இருந்து ஹொளேநரசிபுரா காவல் நிலையத்திற்கு தேவராஜே கௌடாவை அழைத்து வந்த போலீஸாா், பின்னா் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினா்.