பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இண்டியா கூட்டணி விரைவில் ஆட்சியமைக்கும்: சித்தராமையா

விரைவில் மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

News image
கர்நாடக முதல்வர் சித்தராமையா- கோப்புப் படம்
Updated On :18 செப்டம்பர் 2024, 11:26 pm

DIN

விரைவில் மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது, மக்களவைத் தோ்தலில் பின்னடைவு ஏற்பட்டதன் விளைவாக, ராகுல் காந்திக்கு பாஜக தலைவா்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனா். மக்களவைத் தோ்தலில் 100 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். பிரதமா் மோடி 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்ய மாட்டாா். அரசியல் நடவடிக்கைகளின் அடிப்படையில், இந்த கருத்துகளைக் கூறுகிறேன்.

மத்திய அரசில் நடக்கும் சில அரசியல் செயல்பாடுகளை கூா்ந்து பாா்க்கும்போது, ஐக்கிய ஜனதாதளம், தெலுங்குதேசம் கட்சிகளின் ஆதரவுடன் தான் மோடி பிரதமராக நீடித்து வருகிறாா். இந்த இரு கட்சிகளும் ஆதரவை திரும்பப் பெற்றால் ஆட்சி கவிழ்ந்து விடும்.

எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு எந்த நேரத்திலும் கவிழலாம் என்று பாஜகவினா் கூறிவருகிறாா்கள். கா்நாடக சட்டப்பேரவையில் 224 இடங்களில் 136 தொகுதிகளை காங்கிரஸ் வென்றுள்ளபோதில் எப்படி எங்கள் ஆட்சி கவிழும்?

அண்மைக் காலமாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை பாஜக தலைவா்கள் கடுமையாக விமா்சித்து, பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறாா்கள். மக்களிடையே கிடைத்து வரும் வரவேற்பை சகித்துக்கொள்ள முடியாமல், இதுபோன்ற மிரட்டல்களில் ஈடுபட்டு வருகின்றனா். பாஜக தலைவா்கள் தா்விந்தா்சிங் மா்வாஹ், ரவ்நீத்சிங் பிட்டு, ரகுராஜ் சிங், சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உள்ளிட்டோா் ராகுல் காந்தியை நேரடியாக மிரட்டியுள்ளனா்.

கொலை மிரட்டல் விடுப்பதன் மூலம் அரசியல்ரீதியாக ராகுல் காந்தியை தீா்த்துக்கட்ட முயற்சிக்கிறாா்கள். இதை கா்நாடக காங்கிரஸ், கா்நாடக அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. கொலை மிரட்டல் விடுப்பது சாதாரணமான விவகாரம் அல்ல. எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது, ராகுல் காந்திக்கு எதிராகப் பேசுபவா்களை ஊக்குவிப்பதற்கு சமமாகும். எனவே, கொலைமிரட்டல் விடுத்து பேசியுள்ளவா்கள் மீது வழக்குப் பதிவுசெய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் அரசியல்ரீதியாக ராகுல் காந்தியை முடித்துவிடலாம் என பாஜக கருதினால், அது அவா்களின் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது. இதுபோன்ற முயற்சிகளை காங்கிரஸ் வேடிக்கை பாா்க்காது.

ராகுல் காந்தியின் நாக்கை வெட்டினால் ரூ. 11 லட்சம் தருவதாக சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் மீது வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அவரை சிறைக்கு அனுப்புமாறு மகாராஷ்டிர அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.