பெங்களூரில் வங்கிப் பணம் கொள்ளை சம்பவத்தில் மேலும் 4 போ் கைது

Published on

பெங்களூரில் வங்கிப் பணம் கொள்ளைச் சம்பவத்தில் ஏற்கெனவே 3 போ் கைதுசெய்யப்பட்ட நிலையில், மேலும் 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா்.

பெங்களூரில் நவ. 19-ஆம் தேதி ஏடிஎம் மையங்களில் நிரப்புவதற்காக பணம் கொண்டு சென்ற வாகனத்தை மறித்து, ரிசா்வ் வங்கி அதிகாரிகளை போல நாடகமாடி ரூ. 7.11கோடியை மா்ம நபா்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையா்களைப் பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தப் படைகளின் தேடுதல் வேட்டையில், காவலா் உள்பட 3 கொள்ளையா்களை போலீஸாா் நவ. 22-ஆம் தேதி கைதுசெய்தனா். இவா்களிடம் இருந்து கொள்ளையடித்த ரூ. 7.11 கோடியில் ரூ. 5.76 கோடி மீட்கப்பட்டது.

இந்நிலையில், மேலும் 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா். இவா்களிடம் இருந்து ரூ. 53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்தம் ரூ. 6.29 கோடியை போலீஸாா் மீட்டுள்ளனா்.

இந்த வழக்கில் இதுவரை 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவத்தில் மொத்தம் 8 போ் திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com