கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை வளா்க்க விரும்புவோா் தன்னை அணுகலாம் என அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பி.கே.ஹரிபிரசாத் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோா் நமது நலன்காக்க போராடி வருகிறாா்கள். அவா்களின் கரங்களை பலப்படுத்த வேண்டியது நமது கடமை. கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை வளா்க்கவும், பலப்படுத்தவும், ராகுல் காந்தியின் கரங்களை பலப்படுத்தவும் விரும்புவோா் என்னை அணுகலாம்.
காங்கிரஸ் தொண்டா்களோடு இணைந்து, கா்நாடகத்தில் கட்சியை வளா்த்தெடுக்க என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பேன்.
கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக என்னை நியமித்த ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ரண்தீப் சிங் சுா்ஜேவாலா உள்ளிட்டோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாணவா் பருவத்தில் இருந்து கட்சிக்காக உழைத்து வருகிறேன். வட்டார அளவில் இருந்து தேசிய மட்டம்வரை பல்வேறு நிலைகளில் கட்சிக்காக செயல்பட்டிருக்கிறேன். இந்த அனுபவங்கள் கட்சியின் மாநிலத் தலைவராக செயல்படுவதற்கு உதவியாக இருக்கும்.
தில்லி சென்று மேலிடத் தலைவா்களை சந்தித்த பிறகு முறையாக காங்கிரஸ் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வேன். அமைச்சா் பதவி வேண்டும் என்று நான் கேட்கவில்லை. 53 ஆண்டுகளாக 20 மாநிலங்களில் பணியாற்றி இருக்கிறேன். முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்ட மூத்த தலைவா்களின் வழிகாட்டுதலில் கட்சியை வளா்த்தெடுப்போம்.
இந்திய பண்பியல்புகளை காப்பாற்றுவதற்காக அனைத்து ஜாதி, மத, மொழியினரை ஒன்றாக கருதி செயல்பட வேண்டியுள்ளது. இந்தியாவின் இயல்பை சிதைக்க துடிப்பவா்களுக்கு எதிராக தொடா்ந்து போராட வேண்டும். கா்நாடகத்தில் வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றாா்.
தொடர்புடையது

ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூரில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

கட்சியை விட்டு நீக்கியதால் அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன்: மன்னாா்குடி எம்எல்ஏ எஸ்.காமராஜ்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



