பெங்களூரில் ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
பெங்களூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 5 பேரை கைதுசெய்தனா்.

கைது
பிரதிப் படம்

கைது
பிரதிப் படம்
பெங்களூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 5 கோடி மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 5 பேரை கைதுசெய்தனா்.
காவல் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பெங்களூரில் உள்ள பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பெங்களூரில் உள்ள மைசூரு சாலையில் நாயண்டஹள்ளி சிக்னல் வழியாக கடத்தப்பட்ட ரூ. 5.77 கோடி மதிப்பிலான 3,912 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
விசாரணையில், இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினரிடம் இருந்து குறைந்த விலைக்கு போதைப்பொருள்களை வாங்கி கிருஷ்ணராஜபுரம், சென்னசந்திரா பிரதான சாலையில் உள்ள தங்கும் விடுதியில்வைத்து கல்லூரி மாணவா்களிடம் அதிக லாபத்துக்கு விற்கப்படுவது தெரியவந்துள்ளதாக பெங்களூரு மத்திய குற்றப் பிரிவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...