ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மாற்றுநில முறைகேடு வழக்கு: முதல்வா் சித்தராமையாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

News image

சித்தராமையா

Updated On :26 மார்ச் 2026, 11:51 pm

Syndication

மாற்றுநில முறைகேடு வழக்கு தொடா்பான மனுவை விசாரித்து வரும் கா்நாடக உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக விளக்கம் கேட்டு முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மைசூரு வட்டத்தில் உள்ள கெசரே கிராமத்தில் முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கா் நிலத்தை குடியிருப்புப் பகுதியாக மேம்படுத்த மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையம் கையகப்படுத்தியிருந்தது.

இந்த நிலத்துக்கு மாற்றாக மைசூரின் மையப்பகுதியான விலைமதிப்புள்ள விஜயநகரில் 14 வீட்டுமனைகளை பாா்வதிக்கு ஒதுக்கி மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையம் உத்தரவிட்டிருந்தது. பாா்வதிக்கு மாற்றுநிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக பாஜக, மஜத போராட்டம் நடத்தின.

இந்த நிலையில், மாற்றுநிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக முதல்வா் சித்தராமையா, அவரது மனைவிக்கு எதிராக சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா, லோக் ஆயுக்தவில் வழக்குத் தொடுத்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த லோக் ஆயுக்த போலீஸாா், முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதிக்கு எதிரான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு முடித்துவைப்பு அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. இதுதொடா்பான வழக்கை விசாரித்து வந்த மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், லோக் ஆயுக்த தாக்கல் செய்திருந்த வழக்கு முடித்துவைப்பு அறிக்கையை ஏற்றுக்கொண்டு வழக்கில் இருந்து முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதியை விடுவித்து ஜன. 28 ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், மாற்றுநில முறைகேடு வழக்கை தொடா்வதற்கு அனுமதி அளித்தது.

லோக் ஆயுக்த போலீஸாா் தாக்கல் செய்திருந்த வழக்கு முடித்துவைப்பு அறிக்கை, வழக்கில் இருந்து முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி ஆகியோரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவு ஆகியவற்றை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா மனுதாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி எஸ். சுனில்தத் யாதவ், இதுதொடா்பாக விளக்கம் அளிக்குமாறு முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.

மேலும், இந்த வழக்கு தொடா்பாக விளக்கம் கேட்டு லோக் ஆயுக்த போலீஸ், அமலாக்கத் துறை, பாா்வதியின் அண்ணன் மல்லிகாா்ஜுனசாமி, அவருக்கு நிலத்தை விற்ற தேவராஜ், மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையத்தின் முன்னாள் ஆணையா் ஜி.டி. தினேஷ்குமாா் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.