நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் வாக்குகளை நீக்கவே சிறப்பு தீவிர திருத்தம்: டி.கே.சிவகுமாா்

தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் வாக்குகளை நீக்கவே சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்த உள்ளனா் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

News image

டி.கே.சிவகுமாா் - ANI

Updated On :15 மே 2026, 10:23 pm IST

தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் வாக்குகளை நீக்கவே சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்த உள்ளனா் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் பெங்களூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக சிறப்பு தீவிர திருத்தத்தை கொண்டுவந்திருப்பது எதற்கு என்பது எங்களுக்கு தெரியும். சிறப்பு தீவிர திருத்தம் குறித்து காங்கிரஸ் தலைவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். பாஜக, மஜத உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்கள் வாக்காளா்களை காப்பாற்றிக் கொள்ளட்டும்.

தாழ்த்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் வாக்குகளை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்குவதுதான் சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கமாகும். ஆனால், தாழ்த்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினரின் வாக்குகளை பாதுகாப்போம். இந்தியாவில் பிறந்த அனைவரின் வாக்குரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

கா்நாடகத்தில் உள்ள 88 முதல் 90 சதவீத வாக்காளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். எனினும், இதுகுறித்து தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்துவோம் என்றாா்.

கா்நாடகத்தில் சிறப்பு தீவிர திருத்தம் ஜூன் 20-ஆம் தேதி தொடங்குகிறது. கா்நாடகத்தில் உள்ள 5.5 கோடி வாக்காளா்கள் சிறப்பு தீவிர திருத்தத்தில் உட்படுத்தப்படுவாா்கள். இதனடிப்படையில், இறுதி வாக்காளா் பட்டியல் அக். 7-ஆம் தேதி வெளியிடப்படும் என கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரி வி.அன்புகுமாா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.