இத்திட்டத்திற்கான நிதி மத்திய அரசிடமிருந்து நேரடியாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்படுகிறது. சிறப்பு பள்ளிகளுக்கு நிதியுதவி கிடைக்காதது குறித்து அண்மையில்தான் எங்கள் கவனத்துக்கு வந்தது. இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். விரைவில் நிதியுதவி கிடைக்கும் என்றார். இது மத்திய அரசின் திட்டமாக இருந்தபோதிலும், திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி, சிறார் தொழிலாளர் முறையை அகற்றுவது மாநில அரசின் கடமை. ஆனால் மாநில அரசு உரிய கவனம் செலுத்தாததால், சிறார் தொழிலாளர்கள் சிறப்பு பள்ளிகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.