நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வுமுதல்வர் விஜய்யுடன் மாணிக்கம் தாகூர் சந்திப்பு!போர்ப் பதற்றம்! ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

சுந்தர சண்முகனார் பற்றிய குறுந்தகடு வெளியீட்டு விழா

புதுச்சேரி, நவ.11:  புதுச்சேரியின் மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் சுந்தரசண்முகனார் பற்றிய குறுந்தகடு வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.   பேராசிரியர் சுந்தரசண்முகனார் புதுச்சேரியில் வாழ்ந்து மற

Published On :25 டிசம்பர் 2023, 9:47 pm IST

புதுச்சேரி, நவ.11:  புதுச்சேரியின் மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் சுந்தரசண்முகனார் பற்றிய குறுந்தகடு வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  பேராசிரியர் சுந்தரசண்முகனார் புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர். 70 நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவர், தமிழக அரசின் திருவள்ளுவர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். அவருடைய 6 நூல்கள் பல பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.  அவரைப் பற்றிய குறுந்தகடு பேராசிரியர் சுந்தரசண்முகனார் அறக்கட்டளையினரால் பேராசிரியரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

  இந்த குறுந்தகட்டினை முன்னாள் புதுச்சேரி சட்டத்துறைச் செயலர் வயி.நாராயணசாமி வெளியிட்டார். அறக்கட்டளை துணைத் தலைவர் புலவர் வி.திருவேங்கடம் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரெஞ்சுப் பேராசிரியர் க.சச்சிதானந்தம், அறக்கட்டளை நிறுவனர் பேராசிரியர் சு.ச.சரவணன், செயலர் சு.வேல்முருகன், குறுந்தகட்டினை உருவாக்கிய செ.இலக்குவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.